போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சிங்கம் ரிட்டன்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு அஜய் தேவ்கன், தற்போது ஆக்ஷன் ஜாக்ஷன் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா இயக்கும் இப்படத்தில் வரும் சில சண்டைக் காட்சிகளுக்காக அஜய் தேவ்கன் பல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.
இந்த சண்டை காட்சிகளில் நடிப்பதற்கு தீவிர உணவுக்கட்டுப்பாட்டில் இருந்து தனது உடல் எடையை 17 கிலோ குறைத்துள்ளாராம். உடல் எடையை குறைப்பதற்காக முட்டையின் வெள்ளைக்கரு, வேகவைத்த காய்கறிகள், சிக்கன் இவற்றை மட்டுமே சாப்பிட்டாராம்.
சண்டை பயிற்சிக்காக தனது வேனிலேயே மொபைல் ஜிம் ஒன்றையும் அமைத்துள்ளாராம் அஜய். இந்த தீவிர பயிற்சியின் காரணமாக அஜய்யின் தோற்றமே முற்றிலும் மாறி உள்ளதாம். அஜய் தேவ்கனின் இந்த ஆச்சர்யப்பட வைக்கும் மாறுப்பட்ட தோற்றம் படத்தின் டிரைலரை மிரட்டலாக காட்டி உள்ளதாம்.