அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் |
டைகர் ஷரோப் படத்தில் அனைவரையும் கவர்ந்த க்ருத்தி சனோன், தற்போது தனது இரண்டாவது படத்தில் அக்ஷை குமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சிங் இஸ் பிளிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரபு தேவா இயக்குகிறார். இந்த படத்தில் க்ருத்தி, டான்சராக நடிப்பதாக முன்னர் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது, அந்த படத்தில் க்ருத்திக்காக சண்டைக் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக ஏற்கனவே டான்ஸ் பயிற்சி எடுத்து வந்த க்ருத்தி, இப்போது கராத்தேவும் பயின்று வருகிறாராம். இந்த படத்தில் பல ஆக்ஷன் காட்சிகளில் க்ருத்தி நடிக்க வேண்டி உள்ளதால் இந்த பயிற்சி அவருக்கு தேவைப்படுகிறதாம். படத்தின் ஹீரோவான அக்ஷை குமார் பல படங்களில் ஆக்ஷனில் அசத்தி உள்ளார். இருப்பினும் இந்த படத்தில் அவருக்கு இணையாக ஹீரோயினும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க உள்ளதால் அவரும் கூடுதல் பயிற்சி செய்து வருகிறாராம்.