ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
பாலிவுட்டின் நீண்டநாள் காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும். தற்போது, ''பேங் பேங்'' படத்தின் ஹிட்டால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் கத்ரீனா. அதேசமயம் அவரது காதலரான ரன்பீர் கபூர், தொண்டையில் ஆபரேஷன் செய்து கொண்டு ஓய்வில் இருக்கிறார். தற்போது அவரால் அதிகம் பேச முடியாது, உணவும், தண்ணீர் ஆகாரமாகத்தான் கொடுக்கப்படுகிறது. ரன்பீரின் அம்மா நீத்து சிங் அவரை கூட இருந்து கவனித்து வருகிறார். உடன் கத்ரீனாவும், ரன்பீருக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இந்நிலையில், தான் பூரண குணமானவுடன், நடிகை கத்ரீனாவுடன், புதிய அடுக்குமாடி குடியிருப்பில் குடிபெயர இருக்கிறார் ரன்பீர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு பல்வேறு வசதிகளுடன் ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது.