போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஸ்டார் ப்ளஸ் டிவியில் நடைபெறும் இந்தியாவின் ரா ஸ்டார் என்ற மியூசிக் ரியாலிட்டி ஷோவில் இந்த வாரம் மிக முக்கியமானதாகும். கடந்த 3 மாதங்களில் தேர்வு செய்யப்பட்ட 10 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இதுவரை எலிமிநேஷன் இல்லாமல் சென்ற இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் 5 போட்டியாளர்கள் நீக்கப்பட உள்ளனர். காயம் காரணமாக கடந்த சில வாரங்களாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்த ஹனிசிங் இந்த வாரம் பங்கேற்பார் என கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஒரு பிரபலம் கலந்து கொள்வது போன்று இந்த வாரம் சலீம் சுலைமானும், அபிஷேக் பச்சனும் கலந்து கொள்ள உள்ளனர். இசை மேதைகள் மற்றம் சிறந்த ரசிகர்களை ஒவ்வொரு வாரமும் தேர்வு செய்து வருவதாகவும், ரசிகர்களின் ஆதரவால் தனது உடல் நலம் தேறி வருவதாக இந்நிகழ்ச்சியை நடத்தும் யோ யோ ஹனிசிங் தெரிவித்துள்ளார்.