பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
இந்த ஆண்டில் பாலிவுட்டை பொருத்தவரை அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருப்பது அமீர்கான் நடித்த பிகே படம். பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புக்களையும் ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் போஸ்டர்கள், இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை அனைவரிடமும் ஏற்கனவே ஏற்படுத்தி விட்டன.
3 இடியட்ஸ் படத்தை தயாரித்த ஹிட் படக்குழு தான் இந்த படத்தையும் தயாரித்திருப்பதால், இது அதிக விலைக்கு விற்பனையாகும் என கூறப்பட்டது. இந்த எதிர்பார்ப்பை உண்மையாக்கும் விதமாக தற்போது பிகே படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ.85 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ள இந்த படம், இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிகளை வசூலிக்கும் என படக்குழுவினர் உறுதியாக கூறியதை அடுத்தே இவ்வளவு அதிக தொகைக்கு சாட்டிலைட் உரிமம் வாங்கப்பட்டதாம்.
கிக் படத்திற்கு பிறகு அதிக விலைக்கு சாட்டிலைட் உரிமம் விற்கப்பட்ட இரண்டாவது படம் இது தானாம். அதிகமான விலைக்கு பிகே படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்பனை விற்பனை செய்யப்பட்டுள்ளதால், போட்ட பணத்தை எடுத்து விடலாம் என நம்பிக்கையிலும், சந்தோஷத்திலும் இருக்கிறார்கள் பிகே படத்தின் தயாரிப்பாளர்கள்.