தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்து இரு தினங்களுக்கு முன் வெளிவந்த 'கிக்' திரைப்படம் முதல் நாளில் சுமார் 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் ரவி தேஜா நடிக்க 'கிக்' என்ற பெயரில் வெளிவந்த இந்தப் படம் தமிழில் ஜெயம் ரவி நடிக்க 'தில்லாலங்கடி'யாக வெளிவந்து சுமாரான வெற்றியையே பெற்றது. ஹிந்தியில் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது.
பாலிவுட்டில் வெளிவந்து முதல் நாளில் வசூல் சாதனை புரிந்த படங்களில் 'கிக்' நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆமீர்கான் நடித்து வெளிவந்த 'தூம் 3' படம் 36 கோடி ரூபாயையும், ஷாரூக்கான் நடித்து வெளிவந்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படம் 33 கோடி ரூபாயையும், சல்மான் கான் நடித்து 2012ம் ஆண்டில் வெளிவந்த 'ஏக் தா டைகர்' 32 கோடி ரூபாயையும் வசூல் செய்தது. தற்போது 'கிக்' 25 கோடி ரூபாயை வசூல் செய்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
கண்டிப்பாக படம் சூப்பர் ஹிட்டாகி விடும் என்று சொல்கிறார்கள். ஒரு சில வாரங்களிலேயே படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டுவிடும் என்கிறார்கள். பாலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தி தான்தான் என சல்மான் கான் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.