ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
அமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப் நடித்த தூம் 3 சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியானது. பாகிஸ்தான் பழமைவாதிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே 56 தியேட்டர்களில் ரிலீசானது. அன்றைய தினமே அதாவது ஒரே நாளிலேயே 2 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது பாகிஸ்தான் சினிமா வரலாற்றில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அந்த நாட்டில் தயாரான நேரடி பாகிஸ்தானி படமான வார் ஒரே நாளில் ஒரு கோடியே 14 லட்சம் எசூலித்தது சாதனை அளவாக இருந்தது. இப்போது அதனை தூம் 3 முறியடித்துள்ளது.
ஒட்டு மொத்த வசூலில் சென்னை எக்ஸ்பிரஸ் 10 கோடி வசூலித்ததுதான் தற்போதைய சாதனை அளவாக இருக்கிறது. 15 கோடி வசூலித்து தூம் 3, சென்னை எக்ஸ்பிரஸ் சாதனையை முறியடிக்கும் என்கிறார்கள்.