இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகிய இருவரும் சேர்ந்து தொழிலதிபர் ஒருவரிடம் 60 கோடி மோசடி செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார் ஷில்பா ஷெட்டி. ஆனால் அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அந்த 60 கோடியை டெபாசிட் செய்தால் அனுமதி தர பரிசீலிப்பதாக தெரிவித்தது.
இதற்கிடையே ஷில்பாவும் அவரது கணவரும் வெளிநாடு செல்ல அனுமதி கேட்ட மனுவை வாபஸ் பெற விரும்புவதாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதை நீதிமன்றமும் ஏற்றது. எதிர்காலத்தில் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால் மனு செய்வதாக இருவரும் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற கெடுபிடியால் ஷில்பாவும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளனர்.