தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
தெலுங்கு திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், விரைவில் வெளியாக இருக்கும் தெலுசு கத என்கிற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதில் கதாநாயகனாக சித்து ஜொன்னலகட்டா, கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். வரும் அக்.,17ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து யு-டியூபில் வெளியிடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சொகசு சுத்ததரமா என்கிற பாடல் வெளியாகி உள்ளது. நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் இசையமைப்பாளர் தமன், இந்த பாடலை பாடியுள்ள பின்னணி பாடகர் கார்த்திக் இருவரும் இணைந்து நடிக்கும் விதமாக சில புரமோஷன் காட்சிகளையும் இந்த பாடலில் இணைத்துள்ளார்கள்.
அதில் ஒரு காட்சியில் பேருந்து ஒன்றை தமன் ஓட்டி செல்வது போலவும், பாடகர் கார்த்திக் கண்டக்டராக டிக்கெட் கொடுப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே நடிப்பு ஆர்வம் மிக்க தமன் தனது படத்தின் பாடல்கள் வெளியாகும் போதெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் தனது நடிப்பு மூலமாக ஒரு பங்களிப்பையும் தொடர்ந்து செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.