ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நம்மூர் நடிகை த்ரிஷாவுக்கு நாய்கள் என்றால் உயிர். வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் விதவிதமான நாய்குட்டிகளை வாங்கி வந்து டஜன் கணக்கில் தனது வீட்டில் வளர்த்து வருகிறார். அதோடு, தான் சாலைகளில் காரோட்டி செல்லும்போது எங்காவது நாய்கள் அடிபட்டு கிடந்தாலோ, யாராவது நாய்களை தாக்குவதைப்பார்த்தாலோ அவர்களிடம் பைட் பண்ணி அந்த நாய்களை காப்பாற்றுவார். அதையடுத்து, பிராணிகள் நல வாரியத்துக்கு போன் செய்து தகவல் கொடுத்து அவற்றை ஒப்படைப்பார். அந்த அளவுக்கு பிராணிகள் மீது அதிக பாசம் கொண்டவர் த்ரிஷா.
இவரைப்போலவே பாலிவுட் நடிகை மாதுரி தீட்ஷித்துக்கும் நாய்கள் மீது கொள்ளை பிரியமாம். சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு படப்பிடிப்புக்காக அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது பலத்த மழை கொட்டியதாம். அப்போது, பிறந்து சில நாட்களே ஆன ஐந்தாறு நாய்க்குட்டிகள் மழையில் நனைந்தபடி போராடிக்கொண்டிருந்ததாம். இதைப்பார்த்த மாதுரி, உடனே காரை நிறுத்தி அவற்றுக்கு முதலுதவி அளித்தாராம்.
அதோடு, தனது டாக்டரையும் அந்த ஸ்பாட்டுக்கு வரவைத்து ட்ரீட்மெண்ட் கொடுத்தவர், பிராணிகள் நல வாரியத்திடம் அந்த நாய்களை ஒப்படைத்திருக்கிறார். இப்படி நாய்களுக்காக படப்பிடிப்பையே அவர் மறந்து விட்டதால், அன்றைய தினம் நடக்கவிருந்த படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டதாம்.