தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இந்த படம் 2007ல் ஹிந்தியில் பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் பூல் புலயா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ஜோதிகா நடித்திருந்த கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். இந்தப் படம் அப்போதே வெற்றி படமாக அமைந்தாலும் கூட 15 வருட இடைவெளி விட்டு இதன் இரண்டாம் பாகம் பூல் புலையா-2 என்கிற பெயரில் வெளியானது.
இந்தப் படத்தை அனீஸ் பஸ்மி என்பவர் இயக்கியிருந்தார். நடிகை தபு இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்திருந்தார். கதாநாயகனாக கார்த்திக் ஆர்யன் நடித்திருந்தார். இந்த படமும் வெற்றி படமாக அமைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகமாக பூல் புலையா-3 உருவாகியுள்ளது. இந்தப்படத்தையும் அனீஸ் பஸ்மியே இயக்கியுள்ளார்.
முதல் பாகத்தில் இடம்பெற்ற வித்யா பாலன் இந்த மூன்றாம் பாகத்திலும் தற்போது நடித்துள்ளார். மேலும் எண்பது 90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம்வந்த மாதிரி தீட்சித்தும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடித்த அதே கார்த்திக் ஆர்யன் தான் இதிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இடம்பெற்ற வைஜெயந்தி மாலா, பத்மினி போட்டி நடன பாணியில் இதில் மாதிரி தீட்சித், வித்யா பாலன் இருவருமே இணைந்து ஆடும் அரசவை போட்டி நடன பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதேபோல இந்த இருவருமே பேய் உருவங்களில் இணைந்து கதாநாயகனை மிரட்டும் காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவ., 1ல் இந்த படம் வெளியாக இருக்கிறது.