ஹிந்தி படத்திற்காக டில்லி சென்ற தனுஷ் | கமல் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | ஜீனி படத்தின் புதிய அப்டேட் | சூர்யா பட மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் மலையாள நடிகர் | 2-வது திருமணம் செய்யும் நாக சைதன்யாவுக்கு நாகார்ஜுனா அளிக்கும் விலை உயர்ந்த பரிசு | நான் சினிமாவில் இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் - சிவகார்த்திகேயன் | விடாமுயற்சிக்கும், கேம் சேஞ்சருக்கும் இடையே போட்டியா ?- எஸ்.ஜே.சூர்யா | ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் |
மஹாராஷ்டிரா மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றார்கள். அதையடுத்து பாபா சித்திக்கின் நண்பரான நடிகர் சல்மான்கானையும் கொலை செய்ய அந்த கும்பல் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் அந்த கும்பலைச் சேர்ந்த சுக்பீர் பல்வீர் சிங்கை மும்பை போலீசார் கடந்த புதன் கிழமை கைது செய்தார்கள். அதோடு சல்மான்கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நேரத்தில் மும்பை போலீசாருக்கு வாட்ஸ் அப்பில் வந்த மிரட்டல் செய்தியில், சல்மான்கான் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் ஐந்து கோடி ரூபாய் தர வேண்டும். லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர இதை சல்மான்கான் செய்தாக வேண்டும். இல்லை என்றால் பாபா சித்திக்கை விட சல்மான்கானின் முடிவு மோசமானதாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தற்போது குண்டு துளைக்காத நிசான் பேட்ரோல் எஸ்யூவி என்ற ரக காரை 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார் சல்மான்கான். துபாயில் இருந்து இறக்குமதி செய்துள்ள இந்த காரில் வெடிகுண்டு எச்சரிக்கை அலாரம். குண்டு துளைக்காத பக்கவாட்டு கண்ணாடிகள், ஓட்டுநரை பாதுகாக்கும் வகையிலான திரை மறைப்புகள் போன்ற நவீன அம்சங்கள் நிறைந்திருக்கிறது. தற்போது இந்த காரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு தான் வெளியில் தலைகாட்டி வருகிறார் சல்மான்கான். அதோடு அவர் நடித்து வரும் படப்பிடிப்பு மட்டுமின்றி ஹிந்தி பிக்பாஸ் அரங்குக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .