கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் |
பாலிவுட் தொலைக்காட்சி வட்டாரத்தில் நடிகை ரூபாலி கங்குலி ரொம்பவே பிரபலம். கடந்த 2000ல் இருந்து இப்போது வரை பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட போது முதல் சீசனிலேயே போட்டியாளராக கலந்து கொண்டவர். அது மட்டுமல்ல சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2013ம் வருடம் அஸ்வின் கே வர்மா என்பவரிடம் நெருக்கமாக பழகிய இவர் அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அப்போது அஸ்வின் கே வர்மா அவரது மனைவியுடன் தான் வசித்து வந்தார், விவாகரத்து பெறவில்லை அவர்களுக்கு ஈஷா வர்மா என்கிற மகளும் இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது ஈஷா வர்மா, ரூபா கங்குலி குறித்து சோசியல் மீடியாவில் சில அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக தெரிகிறது. இதனால் கோபமான ரூபா கங்குலி தனது வழக்கறிஞர் மூலமாக ஈஷா வர்மாவுக்கு தன் பெயரை களங்கப்படுத்தியதாக கூறி 50 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அது மட்டுமல்ல பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தற்போது பாலிவுட் சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே சமயம் இந்த விஷயத்தை ஈஷா வர்மா ரொம்பவே கூலாக ஹேண்டில் பண்ணி உள்ளார். அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அமெரிக்க குடியுரிமை பெற்றவரும் கூட. ரூபா கங்குலியின் இந்த நஷ்ட ஈடு வழக்கு குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். இங்கே எங்களுக்கு இது போன்ற விஷயங்களில் பாதுகாப்பு ரொம்பவே அதிகம். அதனால் இதை ஜஸ்ட் லைக் தட் கடந்து சென்று விடுவேன். அதே போல நான் எனது சோசியல் மீடியா பக்கத்தை கொஞ்ச காலத்திற்கு பிரைவேட் ஆக மாற்றப் போகிறேன். இந்த விஷயத்தில் எனக்கு அன்பும் ஆதரவும் தெரிவித்த உங்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.