ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி ராஜா சாப்'. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 2022 முதல் ஆரம்பமாகி கடந்த மூன்று வருடங்களாக மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. 2026 ஜனவரி படத்தை வெளியிட உள்ளார்கள்.
இப்படத்தை பியூப்பிள் மீடியா பேக்டரி, ஐவி என்டர்டெயின்மென்ட் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தை எதிர்த்து டில்லி உயர்நீதி மன்றத்தில் ஐவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஒப்பந்தக் கடமைகளை கடுமையாக மீறியதாகவும், நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளார்கள்.
இந்தப் படத்திற்காக ஐவி என்டர்டெயின்மென்ட் 218 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாம். அந்தத் தொகையை 18 சதவீத வட்டியுடன் திருப்பி கேட்கிறார்கள். ஒப்பந்தத்தை மீறியதோடு, பணத்தைத் திருப்பித் தர பியூப்பிள் மீடியா நிறுவனம் மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதையடுத்து படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.




