பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

இந்திய சினிமாவில் 74 வயதிலும் சாதனை படைக்கும் வசூலை ஒருவரால் கொடுக்க முடியும் என்றால் அது ரஜினிகாந்த் என்ற ஒருவரால் மட்டும்தான் முடியும். நாளை வெளியாக உள்ள அவருடைய 'கூலி' படம் முன்பதிவிலும், முதல் நாள் வசூலிலும், முதல்வார இறுதி நாள் வசூலிலும் சாதனை படைக்கும் அளவிற்கு போய்க் கொண்டிருக்கிறது.
இதற்குப் போட்டியாக 'வார் 2' ஹிந்திப் படமும் நாளை வெளியாகிறது. ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர், கியாரா அத்வானி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். 'கூலி' படத்தின் மூலம் கடுமையான போட்டியை சமாளித்து வருகிறது 'வார் 2'.
இப்போது ரஜினியுடனே போட்டி போடும் அளவிற்கு வந்துள்ள ஹிருத்திக் ரோஷன், அவரது சிறு வயதில் ரஜினி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஹிருத்திக் அப்பா ராகேஷ் ரோஷன் தயாரித்த 'பகவான் தாதா' படத்தில் ஹிருத்திக் குழந்தை நட்சத்திரமாக ரஜினியின் தத்துப்பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராகேஷ் ரோஷன், ஸ்ரீதேவி, டினா முனிம் ஆகியோர் அந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
1986ம் ஆண்டு அவரது மகனாக நடித்து 39 வருடங்களுக்குப் பிறகு 2025ல் அவருடனேயே போட்டி போடுகிறார் ஹிருத்திக்.
ஹிருத்திக் வாழ்த்து
சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்திற்கு, 'வார் 2' நாயகன் ஹிருத்திக் ரோஷன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ‛‛உங்கள் பக்கத்தில் நடிகராக எனது முதல் படிகளை எடுத்தேன். நீங்கள் எனது முதல் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தீர்கள். ரஜினிகாந்த் சார், மற்றும் தொடர்ந்து ஒரு உத்வேகமாகவும் நிலையானகராகவும் இருக்கிறீர்கள். திரையில் 50 ஆண்டுகள் மாயாஜாலத்தை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.