என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராதா நடிப்பில் 1985ம் ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛முதல் மரியாதை'. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் தஸ்தாவெஸ்கி. அவர் காதல் கதையை தழுவி உருவாக்கப்பட்டது தான் சிவாஜி நடித்த ‛முதல் மரியாதை'.
தஸ்தாவெஸ்கி வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் அவர் மீது புகார் கூறினார்கள். அவரை விசாரணைக்கு அழைத்த போலீசார் நீங்கள் புதிதாக ஒரு நாவல் எழுதி அதன் விற்பனை உரிமத்தை கடன் கொடுத்தவர்களுக்கு தர வேண்டும். இல்லாவிட்டால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று எச்சரித்தனர்.
இந்த நிபந்தனைக்கு தஸ்தாவெஸ்கி ஒத்துக் கொண்டார் . விரைவாக நாவல் எழுத எனக்கு ஒரு உதவியாளர் வேண்டும் என்று கேட்டார். அன்னா என்ற இளம் பெண்ணை அவருக்கு உதவியாக அனுப்பி வைக்கப்பட்டார். அன்னாவின் நடவடிக்கைகள் அவருக்கு பிடிக்கவில்லை. அந்தப் பெண்ணிற்கும் அவரை பிடிக்கவில்லை. இந்தச் சூழலில் தஸ்தாவெஸ்கி தனது நாவலை சொல்லச் சொல்ல... அந்தப் பெண் டைப் செய்து கொண்டே வந்தார்.
மெல்ல மெல்ல அந்தப் பெண்ணுக்கு தஸ்தாவெஸ்கியின் எழுத்துப் பிடித்துப்போகிறது. காலப்போக்கில அவரது எழுத்தில் மயங்கிப் போகிறாள். குறிப்பிட்ட நாளுக்குள் நாவலை முடிக்காவிட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்பதால், அந்தப் பெண் இரவு பகல் பாராமல் அந்த நாவலை டைப் செய்து முடிக்கிறார். அதன்பிறகு அவர் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார். கடனையும் அடைத்துவிடுகிறார்.
அதன்பின், அன்னாவுக்கு தஸ்தாவெஸ்கியின் மேல் அன்பு மலர்கிறது. அவருடைய எழுத்துகளை டைப் செய்வதில் ஆர்வமாகிறாள். அதனால், தனக்குத் திருமணமே வேண்டாம் என்றும் மறுத்துவிடுகிறாள். தஸ்தாவெஸ்கிக்கு அவளது நட்பு பிடித்துப்போக, அவரும் அவள் மீது அன்பு செலுத்த ஆரம்பித்துவிடுகிறார். அன்னாவுக்கும் தஸ்தாவெஸ்கிக்கும் 40 வயது வித்தியாசம் . ஆனாலும், அவரால் அவளை மறக்க முடியவில்லை. அவள் இல்லாமல் வாழ முடியவில்லை.
இவர்களின் காதல் கதையை தழுவி தான் 'முதல் மரியாதை' படம் உருவானது. எழுத்தாளர், அவரின் உதவியாளர் என்பதை மாற்றி கிராமத்து பெரிய மனிதர், பரிசல் பெண்ணாக மாற்றம் செய்தனர். தஸ்தாவெஸ்கியாக சிவாஜி நடித்தார், அன்னாவாக ராதா நடித்தார். ஆர் செல்வராஜ் இதன் கதையை எழுதினார்.