அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
ஹிந்தியில் இந்த தீபாவளிக்கு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛பூல் புலையா 3'. அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், வித்யாபாலன், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். இந்த படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
வித்யாபாலன் கூறுகையில், ‛‛அனீஸ் பாஸ்மி உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு அற்புதமான மனிதர். பார்வையாளர்களின் பல்சை நன்கு அறிந்தவர். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கதை சொல்லி மற்றும் இயக்குனர். அவரின் காட்சி அமைக்கும் விதத்தை வைத்து நிறைய கற்றுக் கொண்டேன். மாதுரி தீட்சித் மிகவும் அன்பான மற்றும் அருமையான நபர். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவருடன் நடனமாடியதை எனக்கு கிடைத்த பெருமையாக உணர்கிறேன். அவருடன் நடனமாட வேண்டும் என்ற கனவு இருந்தது, இப்போது அது உண்மையாகிவிட்டது" என்றார்.