பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அமீர்கான். வித்தியாசமான கதைகளில் நடிப்பது மட்டுமல்லாமல், சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'லால் சிங் சத்தா' திரைப்படம், பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், தான் சினிமாவில் இருந்து விலகப்போவதாக இவர் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 'லால் சிங் சத்தா' படத்துக்கு முன்பே நான் திரைத் துறையிலிருந்து விலக முடிவு செய்துவிட்டேன். அப்போது நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பயணத்தில் இருந்தேன். கொரோனா காலத்தில் தான், நான் ஒன்றை உணர்ந்தேன். அதாவது என்னுடைய 18 வயது முதல் இன்று வரை என்னுடைய முழு இளமை பருவம் உள்ளிட்ட அனைத்தையும் சினிமாவில் கவனம் செலுத்துவதிலேயே கடந்துவிட்டேன். இதனால் என்னால் குடும்பம், குழந்தைகளுடன் போதிய நேரத்தை செலவிட முடியவில்லை.
என்னுடைய முன்னாள் மனைவி ரீனாவாக இருக்கட்டும், கிரண் ராவாக இருக்கட்டும் அவர்களுக்காக நான் நேரம் செலவிட்டதே கிடையாது. வாழ்வின் பெரும்பகுதியை சினிமாவுக்கே அர்பணித்து விட்டோம், குடும்பத்தை கவனிக்கவில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இதனால் பெரும் குற்ற உணர்வு என்னை ஆட்கொண்டுவிட்டது. கடந்த 35 ஆண்டுகளாக நான் தேவையான படங்களில் நடித்துவிட்டேன். இனி நான் என் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டும். நல்லவேளையாக இதை 56 - 57 வயதிலேயே உணர்ந்துவிட்டேன்.
இந்த முடிவை எடுக்கும்போது, என்னுடைய குழந்தைகள் திரையுலகிலிருந்து விலக வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். அதனால் இந்த 10 வருடங்கள் என்னுடைய சினிமா வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளாக இருக்கும். அதற்குள் 6 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன். இந்த காலக்கட்டத்தில் சிறந்த இயக்குநர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்களுடன் பயணிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.