அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா | 'வாரணாசி' படத்தின் பட்ஜெட், 1300 கோடியா ? |

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரது 100 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன. அதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.
இப்படியான நிலையில் தொடர்ந்து ஊடகங்களில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா மீது அவதூறு செய்திகள் வெளியிட்டு வருவதால் தற்போது ஊடகங்கள் மீது 356வது பிரிவின் கீழ் மானநஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அதில் எங்களது புகைப்படத்தை வெளியிட்டு ஊடகங்கள் தொடர்ந்து தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளி என்று நீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்கவில்லை. அதனால் எங்களை தவறான கோணத்தில் சித்தரித்து செய்தி வெளியிட்டு வரும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மும்பை நீதிமன்றத்தில் ஒரு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து உள்ளார்.