திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

ஹாலிவுட்டில் வெளியான அதிரடி ஆக்ஷன் தொடரான 'சிட்டாடல்' தொடரை தழுவி ஹிந்தியில் உருவாகி உள்ள தொடரில் வருண் தவான், சமந்தா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இந்த இந்தியத் தொடரை டி2ஆர் பிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ ஆகியவை தயாரித்துள்ளன. 'சிட்டாடல் : ஹனி பன்னி' என்ற டைட்டில் கொண்ட இந்த தொடர் வருகிற நவம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரை ராஜ் - டிகே இயக்கியுள்ளனர் . கேகே மேனன், சிம்ரன், சாகிப் சலீம், சிக்கந்தர் கெர், சோஹம் மஜும்தார், சிவன்கித் பரிஹார் மற்றும் காஷ்வி மஜ்முந்தர் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சமந்தா திரைப்பட நடிகையாகவும், அதிரடி உளவாளியாகவும் நடித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரில் சமந்தாவின் அதிரடி சண்டை காட்சிகள் வியக்க வைப்பதாக உள்ளது.
இதுகுறித்து சமந்தா கூறுகையில், "மனங்கவரும் கதைக்களம், செழுமையான கதாபாத்திர ஆழம் மற்றும் சர்வதேச தரத்திற்கு போட்டியாக விளங்கும் சண்டைக்காட்சிகளுடன் ஒரு ஆக்ஷன் நிரம்பிய பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக இது இருக்கும். இதில் ஒரு முக்கியப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது. இதிலுள்ள உளவு கதைகளின் தொகுப்பு, இந்த பிராஜெக்ட்டிற்குள் என்னை ஈர்த்தது. இந்தியாவில் மட்டுமல்லாது, பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படும். பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்கள் இந்தத் தொடரை முழுமையாக ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்." என்றார்.