பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் |
தமிழில் ‛சார்லி சாப்ளின் 2' படத்தில் நடித்தவர் அடா சர்மா. தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் இவர் ‛கேரளா ஸ்டோரி' படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது ‛ரீட்டா சன்யால்' என்ற ஹிந்தி வெப்சீரிஸில் வக்கீலாக நடித்துள்ளார். ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த தொடர் பற்றி இவர் அளித்த பேட்டி...
இந்த தொடரில் உங்கள் கதாபாத்திரம் பற்றி சொல்லுங்கள்...?
இந்த தொடரில் வக்கீல் துறையில் சாதிக்க போராடும் பெண்ணாக வக்கீல் வேடத்தில் நடித்துள்ளேன். ஒரு அரசியல் தொடர்பான வழக்கு என்னிடம் வருகிறது. இதில் வெற்றி பெற அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் தான் இந்த தொடரின் கதை. பொதுவாக ஒரு நடிகைக்கு பலவிதமான வேடங்களில் நடிக்கும் ஆசை இருக்கும். இந்த தொடர் மூலம் எனக்கு ஹரியானா பெண், மீன் வியாபாரி, உணவு ஆய்வாளர் என பல விதமான வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ரீட்டா சன்யாலுக்கும், உங்களுக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கா...?
ஆமாம். ரீட்டா சன்யால் போல் பலரும் சத்தியத்தின் வழியை பின்பற்றி வெற்றி பெற விரும்புகிறார்கள். நானும் நிஜ வாழ்க்கையில் அப்படித்தான். வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றக் கூடாது என்று நினைப்பேன். இதுவரை யாரையும் ஏமாற்றியதில்லை. இந்த தொடரில் ரீட்டா சன்யால் எந்த சூழலிலும் தோற்றது இல்லை, யாருக்கும் பயந்தது இல்லை. நானும் நிஜ வாழ்க்கையில் அப்படித்தான். யாருக்கும் பயப்பட மாட்டேன், எதிலும் தோற்க மாட்டேன்.
கேரளா ஸ்டோரிக்கு பின் படங்களின் கதை தேர்வில் மாற்றம் ஏதும் செய்துள்ளீர்களா...?
அப்படியெல்லாம் இல்லை. எப்போதும் போலத்தான் கதைகளை தேர்வு செய்கிறேன். நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் முன்பு ஐந்து படங்கள் வாய்ப்பு வந்தது. இப்போது நிறைய வாய்ப்புகள் வருகின்றன. காதல், ஆக்ஷன், காமெடி என விதவிதமான ரோல்களில் நடிக்க அணுகுகிறார்கள். இதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.