ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

2013ம் ஆண்டு சிங் ஷாப் த கிரேட் என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானவர் ஊர்வசி ரவுட்டேலா. தொடர்ந்து பெங்காலி, தெலுங்கு படங்களில் நடித்தவர், கடந்த 2022 ம் ஆண்டு லெஜெண்ட் என்ற படத்தில் சரவணன் உடன் நடித்து தமிழுக்கு வந்தார். தற்போது தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஊர்வசி ரவுட்டேலாவின் குளியல் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
ஆனால் இதை யாரோ அவருக்கு தெரியாமல் லீக் அவுட் செய்து விட்டார்கள் என்று நினைக்க முடியவில்லை. காரணம் தனது குளியல் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை பார்த்து விட்டு, அவர் தனது மேனேஜரிடம் போனில் கோபமாக பேசும் இன்னொரு ஆடியோவும் வெளியாகி உள்ளது. அதனால் பப்ளிசிட்டிக்காகவே குளியலறை வீடியோ, மேனேஜருடன் பேசும் ஆடியோ இரண்டையும் சேர்த்து ஊர்வசி லீக் அவுட் செய்திருப்பதாகவே நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ சினிமா படம் தொடர்பாக எடுக்கப்பட்ட காட்சிகள் என்றும் சொல்கிறார்கள்.