பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி | ரூ.550 கோடியை தாண்டியதா கூலி வசூல் | லோகா சாப்ட்டர் 1 சந்திரா படத்திற்கு தனது திரைக்கதையால் வெற்றி தேடித்தந்த நடிகை | பெண் இயக்குனருக்கும், யஷ்க்கும் கருத்து வேறுபாடா? : மலையாள நடிகர் விளக்கம் |
பாலிவுட் நடிகை திகங்கனா சூரியவன்சி. இவர் தமிழில் தனுசு ராசி நேயர்களே என்கிற படத்தில் நடித்துள்ளார். டெலிவிஷன் நடிகையாக இருந்து சினிமாவில் நுழைந்த இவர், சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். அப்படி ஒரு விளம்பர படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்தபோது அவருடன் நட்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அக்ஷய் குமாருக்கு மிகவும் நெருக்கமானவராக தன்னை காட்டிக் கொண்டார் திகங்கனா சூரியவன்சி. இந்த நிலையில் ஒரு ஓடிடி நிறுவனத்திற்காக பிரபல பாலிவுட் சீனியர் நடிகை ஜீனத் அமன் தொகுத்து வழங்கும் ஒரு ரியாலிட்டி ஷோவை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்தது.
இந்த ரியாலிட்டி ஷோவை அக்ஷய் குமார் வழங்கினால் நன்றாக இருக்கும் என அவர்கள் நினைத்தபோது, அவர்களை தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை டீல் செய்தார் திகங்கனா. இதற்காக அக்ஷய் குமாருக்கு ஆறு கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது. மேலும் திகங்கனாவுக்கும் இதற்காக 75 லட்சம் ரூபாய் கொடுப்பதற்கு இந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது. ஆனால் அதன் பிறகு இந்த நிகழ்ச்சியின் வீடியோக்களை அக்ஷய் குமார் பார்க்க விரும்புகிறார் என்று திகங்கனா கூறவே அந்த சமயத்தில் அஜ்மீரில் படப்பிடிப்பில் இருந்த அக்ஷய் குமாருக்கு காட்டுவதற்காக இந்த ஷோ குறித்த வீடியோக்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குடன் இந்த ஷோவின் எடிட்டரையும் சேர்த்து திகங்கனாவுடன் அனுப்பி வைத்தார்கள்.
ஆனால் அங்கே சென்றதும் எடிட்டரை தவிர்த்து விட்டு தான் மட்டுமே அந்த ஹார்ட் டிஸ்கை அக்ஷய் குமாரிடம் காட்டுவதற்காக கொண்டு சென்றாராம் திகங்கனா. அதன்பிறகு இப்போது வரை அந்த ஹார்ட் டிஸ்க்கை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. அதுமட்டுமல்ல அக்ஷய் குமார் தனக்கு பேசப்பட்ட தொகையை முன்கூட்டியே மொத்தமாக தருமாறும் கேட்டதாக தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்துள்ளார் திகங்கனா. அதற்கு அவர்கள் மறுக்கவே இந்த ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியே நிறுத்தி வைக்கப்பட்டது என்பது போன்று தவறான தகவல்களை வெளியே பரப்ப ஆரம்பித்துள்ளார் திகங்கனா.
இதனால் தாங்கள் தயாரித்துள்ள நிகழ்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்த தயாரிப்பாளர் மணி ஹரிசங்கர், திகங்கனா மீது தங்களை பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தாங்கள் தயாரித்து உள்ள நிகழ்ச்சிக்கு அவப்பெயர் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த செய்தி தற்போது பாலிவுட்டில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.