50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் |
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நூர் மாளபிகா தாஸ். மும்பையில் தங்கி பாலிவுட் படங்கள், வெப் தொடர்களில் நடித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். மும்பையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களாகவே அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து பார்த்தபோது நூர் மாளபிகா தாஸ் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அவருக்கு வயது 34.
இதுகுறித்து அசாமில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனாலும் உறவினர்கள் யாரும் வரவில்லை. இதனால் ஒரு தொண்டு நிறுவனம் இறுதிச்சடங்கை நடத்தி உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நூர் மாளபிகாவின் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து நூர் மாளபிகா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே உறவினர்கள் யாரும் வரவில்லை என்றும் தெரிய வந்தது. நூர் மாளபிகா விமான பணிப்பெண்ணாக இருந்து பின்னர் நடிகை ஆனவர்.