தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த ஆவேசம் என்கிற திரைப்படம் வெளியானது. ஜித்து மாதவன் என்பவர் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தற்போது 150 கோடி வசூல் கிளப்பில் இணைய தயாராகி வருகிறது. இந்த படம் ரசிகர்களை மட்டுமல்ல, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களையும் வெகுவாக கவர்ந்து விட்டது. குறிப்பாக பஹத் பாசிலின் அந்த ரங்கா கேங்ஸ்டர் கதாபாத்திரத்தையும் அதை அவர் வெளிப்படுத்திய விதத்தையும் எல்லோரும் பாராட்டினார்கள். இந்த நிலையில் நடிகர் மம்முட்டியும் சமீபத்தில் ஆவேசம் படம் பார்த்துவிட்டு தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
“படம் அருமையாக இருக்கிறது. மொத்த படத்திலும் பஹத் பாசில் தன்னுடைய ஸ்டைலால் அசத்தியுள்ளார். என்னுடைய கதாபாத்திரங்கள் சிலவற்றின் குறிப்புகள் இருந்தாலும் கூட அதை பஹத் பாசில் அவரது சொந்த ஸ்டைலில் செய்திருக்கிறார் என்று பாராட்டியுள்ளார் மம்முட்டி. இதுபோன்று பல கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் மம்முட்டி நடித்துள்ளார். பஹத் பாசில் கூட ஒரு பேட்டியில், ராஜமாணிக்கம் மற்றும் சட்டம்பிநாடு ஆகிய படங்களில் மம்முட்டியின் கதாபாத்திரங்களை இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக் கொண்டு இந்தப்படத்தில் நடித்ததாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.