என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகிய சூப்பர் ஹிட் ஆன ‛அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே படத்தை ஹிந்தியில் ஷாஹித் கபூர் நடிப்பில் ‛கபீர் சிங்' என்கிற பெயரில் ரீமேக் செய்தார். அங்கேயும் இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் என்கிற படத்தையும் இயக்கி கிட்டத்தட்ட 1000 கோடி வசூல் என்கிற சாதனை படத்திற்கு சொந்தக்காரராகவும் மாறினார். இந்த நிலையில் இவர் இயக்கிய கபீர் சிங் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபல பாலிவுட் நடிகர் அடில் ஹுசைன் என்பவர் அந்த படத்தில் நடித்ததற்காக தான் ரொம்பவே வருத்தப்படுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “என் வாழ்க்கையில் கபீர் சிங் என்கிற படத்தில் நடித்ததற்காக மட்டும் நான் ரொம்பவே வருத்தப்படுகிறேன். அந்த படத்தில் நான் நடித்திருக்கவே கூடாது என்று அதன் பிறகு நினைத்தேன். அந்த படத்தின் கதையையும் நான் கேட்கவில்லை. அதன் ஒரிஜினல் படத்தையும் நான் பார்க்கவில்லை. என்னிடம் சொல்லப்பட்ட காட்சி நன்றாக இருந்தது. அதனால் படமும் நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தில் ஒப்புக்கொண்டு நடித்தேன். ஆனால் இன்று அதற்காக வருத்தப்படுகிறேன்” என்று கூறியுள்ளார். கபீர் சிங் வெளியாகி சில வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் திடீரென இப்படி அடில் ஹுசைன் ஒரு கருத்தை கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.