பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா |

1980-90களில் இந்திய சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் ஸ்ரீதேவி. புகழின் உச்சத்தில் இருக்கும்போதே தன்னைவிட வயதில் அதிகம் மூத்த தயாரிப்பாளர் போனி கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். இப்போது இருவருமே நடிக்கிறார்கள். துபாயில் ஒரு விழாவுக்கு சென்ற ஸ்ரீதேவி அங்கு ஓட்டலில் உள்ள குளியலறையில் தவறி விழுந்து இறந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக்க பலரும் முயற்சித்தனர். ஆனால் அதற்கு போனி கபூரும், அவரது மகள்களும் சம்மதிக்கவில்லை. இதற்கிடையில் 'ஸ்ரீதேவி பங்களா' என்று பாலிவுட்டில் ஒரு படம் வந்தது. ஒரு நடிகை தன் வீட்டில் மர்மமான முறையில் இறப்பதுதான் படத்தின் கதை. இது ஸ்ரீதேவியின் கதை அல்ல என்று தயாரிப்பு தரப்பு மறுத்து படத்தை வெளியிட்டது.
இந்த நிலையில் நான் உயிரோடு இருக்கும் வரை ஸ்ரீதேவியின் கதையை படமாக்க விடமாட்டேன் என்ற போனி கபூர் மீண்டும் உறுதியாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஸ்ரீதேவி பெரும்பாலும் தனிப்பட்ட நபராக இருக்க விரும்புவார். அவர் வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது என நினைக்கிறேன். நான் உயிரோடு இருக்கும்வரை அதை அனுமதிக்கமாட்டேன்” என தெரிவித்துள்ளார்.
பல முன்னணி நடிகர்கள் ஸ்ரீதேவியை காதலித்த நிலையில் அவர் திடீரென போனி கபூரை திருமணம் செய்து கொண்டது. அவரது திடீர் மரணம் போன்றவை இன்னும் பல கேள்விகளோடு இருப்பதால் போனி கபூர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.