இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் |

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன். 80 வயதை கடந்த நிலையிலும் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து டிவி நிகழ்ச்சி, விளம்பரம் என பிஸியாக உள்ளார். இந்நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் இவர் திடீரென அனுமதிக்கப்பட்டார்.
காலில் ஏற்பட்ட ரத்த குழாய் அடைப்பு காரணமாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பின் அமிதாப் பச்சன் இன்றே வீடு திரும்பி உள்ளார். தொடர்ந்து சில நாட்கள் ஓய்வில் இருக்க உள்ளார். அதன்பின் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். காலுக்கு தான் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யப்பட்டது அவருக்கு இதயத்தில் எந்த பிரச்னை இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமிதாப் பச்சன் தற்போது பிரமாண்டமாய் உருவாகி வரும் கல்கி 2898ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சயின்ஸ் பிக் ஷன் கலந்த பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது.