'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட் நடிகை கங்கனா தனது அதிரடியான துணிச்சலான கருத்துக்களுக்காக பிரபலமானவர். மணிகர்ணிகா என்கிற படம் மூலம் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்த கங்கனா, மறைந்த பாரத பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தற்போது உருவாகியுள்ள எமர்ஜென்சி என்கிற படத்தில் நடித்துள்ளதுடன், அவரே இயக்கியும் உள்ளார்.
சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு முறையில் மறைந்த பிரபல தலைவர்களை கூட உயிருடன் இருப்பது போன்றும் அவர்கள் பேசுவது போன்றும் தத்ரூபமாக உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் மறைந்த பாரதப் பிரதமர் இந்திராவின் உருவத்தை செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கி அவருக்கு எதிரில் கங்கனா அமர்ந்து கொண்டு அவருடன் உரையாடியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கங்கனா. அதுமட்டுமல்ல செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி உடனும் அவர் உரையாடியது குறித்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.