'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கீதா கோவிந்தம் படத்தில் ஜோடியாக நடித்து ராசியான ஜோடி என்கிற வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றனர். இதை தொடர்ந்து தற்போது வரை அவர்கள் இருவருக்கும் காதல் இருப்பதாகவும் அதை அவர்கள் ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் கீதா கோவிந்தம் படத்தில் நடிப்பதற்கு முன்பே அவர்கள் இருவருக்கும் இடையே நட்பு இருந்திருக்கிறது என்கிற தகவலை ஹிந்தி நடிகரும் தற்போது அனிமல் படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவருமான ரன்பீர் கபூர் தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கு சேனல் ஒன்றில் நடிகர் பாலகிருஷ்ணா நடத்தி தரும் அன்ஸ்டாப்பபிள் என்கிற ரியாலிட்டி ஷோவில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மற்று இயக்குனர் சந்தீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ரன்பீர் கபூர், ‛‛சந்திப் ரெட்டி வங்கா முதன்முதலாக ராஷ்மிகாவை சந்தித்தது அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்காக விஜய் தேவரகொண்டா தனது வீட்டில் கொடுத்த பார்ட்டியின்போது தான் என்று கூறியுள்ளார்.
அர்ஜுன் ரெட்டி படம் வெளியானது 2017 ஆகஸ்ட் மாதம். கீதா கோவிந்தம் படம் வெளியானது 2018 ஆகஸ்ட் மாதம். அதாவது கீதா கோவிந்தம் பட அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் நட்பாக இருந்திருக்கிறார்கள் என்கிற தகவல் இதன்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.