நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
தற்போது நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது அபார பந்து வீச்சால் நட்சத்திர வீரராக மாறி இருக்கிறார் முகமது ஷமி. இந்த நிலையில் முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பாலிவுட் நடிகை பாயல் கோஷ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “முகமது ஷமியை நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளத் தயார். அதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அவர் தனது ஆங்கில திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு சரியென்றால் உலக கோப்பை போட்டிக்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
அவர் இந்த பதிவை வேடிக்கைக்காக வெளியிட்டிருந்தாலும் அது வைரலாகி உள்ளது. முகமது ஷமி 2014ம் ஆண்டு ஹசின் ஜகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
31 வயதான பாயல் கோஷ் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். போதிய சினிமா வாய்ப்பு இல்லாமல் மன அழுத்த பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் சமீபத்தில் அதிலிருந்து மீண்டு தற்போது நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.