'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் ராணிகஞ்ச் : தி கிரேட் பாரத் ரெஸ்க்யூ' திரைப்படம் இன்று (அக்-6) வெளியாகி உள்ளது. இந்த படம் ஜஸ்வந்த் சிங் கில் என்கிற ராணுவ அதிகாரி ஒருவர் செய்த தியாகத்தை மையப்படுத்தி, நிஜ வாழ்க்கை கதையாக தயாராகியுள்ளது. இதில் ஜஸ்வந்த் சிங் கில் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படம் தணிக்கை அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டி தங்களது பாராட்டுகளை வெளிப்படுத்தினர் அதேசமயம் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சரியாக ஜெயிலர் திரைப்படம் வெளியான அதே நாள் அக்ஷய் குமார் நடித்த 'ஓஎம்ஜி-2' வெளியானது. அந்த படத்திற்கு இதே சென்சார் அதிகாரிகள் தான் 27 இடங்களில் கட் கொடுத்து, ஏ சான்றிதழும் வழங்கி அக்ஷய் குமாரை அப்செட் ஆக்கினார்கள்.
இன்னொரு பக்கம் நாட்டுக்காக தியாகம் செய்த ஒரு ராணுவ வீரரை பற்றி உருவாகியுள்ள இந்த படத்தை பார்த்து எழுந்து நின்று கைதட்டிய இந்த அதிகாரிகளில் சிலர்தான், சமீபத்தில் விஷாலின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதும் ஆச்சரியமான ஒன்று.