பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் | விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி |
இயக்குனர் அட்லி டைரக்ஷனில் ஷாரூக்கான்நடித்த ஜவான் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாநாயகிகளாக நடித்த நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் இவர்கள் இருவரையும் தவிர இந்த படத்தில் இடம்பெற்ற பிரியாமணி உள்ளிட்ட இன்னும் சில நடிகைகளும் தங்களது பங்களிப்பை சிறப்பாக தந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். அப்படி ஜவான் படத்தில் ஒரு ஜெயில் அதிகாரியாக ஷாரூக்கானின் வளர்ப்புத்தாயாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரிதி தோக்ரா.
37 வயதான இவர் இந்த படத்தில் ஷாரூக்கானின் அம்மாவாக நடித்திருந்ததை பலரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். ஆனால் ஷாரூக்கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்த போது அதை மறுக்க மனமில்லாமல் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டதாக ஏற்கனவே கூறியிருந்தார் ரிதி தோக்ரா.
தற்போது படம் வெளியாகி உள்ள நிலையில் ஒரு பேட்டியில் இவர் கூறும்போது, “ஷாரூக்கானுடன் இணைந்து ஒரு காட்சியிலாவது ரொமான்ஸ் பண்ண வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் அவர் படத்திற்கான வாய்ப்பு வந்தபோது அம்மா கதாபாத்திரம் என்றாலும் மறுக்க முடியவில்லை. அதேசமயம் படப்பிடிப்பின் போது ஷாரூக்கான் என்னிடம் நீ என் அம்மாவாக நடித்தது உண்மையிலேயே துரதிஷ்டமான ஒன்றுதான் என என்னிடம் கூறினார். அந்த ஒரு வார்த்தை போதும்.. அவருடன் ஜோடியாக நடிக்க முடியாத அந்த வருத்தமும் மறைந்து விட்டது” என்று கூறியுள்ளார் ரிதி தோக்ரா.