கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தென்னிந்திய திரையுலகில் குறிப்பாக தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணியில் உள்ள நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதை விரும்புவதில்லை. காரணம் யாருக்கு முக்கியத்துவம் அதிகம் என்கிற எண்ணம் சம்பந்தப்பட்ட ஹீரோக்களுக்கு ஏற்படாவிட்டாலும் கூட அவர்களது ரசிகர்களுக்குள் மோதல் ஏற்படும் என்பதற்காக தவிர்த்து வருகிறார்கள். அதேசமயம் பாலிவுட்டில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இப்படி மல்டி ஸ்டார் படங்களில் இணைந்து நடிப்பதை வரவேற்கவே செய்கிறார்கள்.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்திருந்தார் சல்மான்கான். அப்படிப்பட்டவர்கள் ஒரு படத்தில் சம முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க தயங்குவார்களா என்ன? அப்படி ஒரு படம் இவர்கள் இருவரது கூட்டணியில் விரைவில் உருவாக இருக்கிறது.
இந்த படத்திற்கு டைகர் வெர்சஸ் பதான் என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளதாம்.. ஏற்கனவே சல்மான்கான் நடித்து ஹிட்டான டைகர் மற்றும் ஷாரூக்கான் நடிப்பில் ஹிட்டான பதான் என இரண்டு படங்களின் டைட்டிலையுமே இணைத்து மாஸ் டைட்டிலாக புதிய படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். வரும் மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.
மலையாளத்தில் இதேபோன்று மம்முட்டி நடித்த 'தி கிங்' மற்றும் சுரேஷ்கோபி நடித்த 'கமிஷனர்' ஆகிய படங்களில் டைட்டில்களை இணைத்து 'தி கிங் அண்ட் கமிஷனர்' என்கிற பெயரில் உருவான படத்தில் மம்முட்டி, சுரேஷ்கோபி இருவருமே இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.