ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தமிழில் வெளிவந்த 'நான் ராஜாவாக போகிறேன்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர் ஜரீன் கான். ஏராளமான பாலிவுட் படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு கோல்கட்டாவில் நடந்த துர்கா பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்கவும், நடனம் ஆடவும் ஜரீன் கானுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியும் பல லட்சம் செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கடைசி நேரத்தில் மறுத்துவிட்டார் ஜரீன் கான். இது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் கோல்கட்டாவின் சீல்டா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜரீன் கானுக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் ஜரீன் கான் ஒருமுறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் தற்போது ஜரீன் கானுக்கு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து ஜரீன் கான் கூறும்போது, ''என் மீதான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. விழாவுக்கு முதல் மந்திரி வருவதாக பொய் சொல்லி என்னை அழைத்தனர். அதனால் போகவில்லை. வக்கீலை சந்தித்து பேசிய பிறகு விளக்கம் அளிக்கிறேன்'' என்றார்.