டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பாலிவுட்டில் கடந்த 2007ம் ஆண்டில் வெல்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2015ம் ஆண்டில் வெல்கம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. தற்போது வெல்கம் படத்தின் மூன்றாம் பாகத்தை அறிவித்துள்ளனர்.
‛வெல்கம் டு த ஜங்கிள்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அஹ்மத் கான் இயக்குகிறார். அக்ஷய் குமார், சஞ்சய் டத், சுனில் ஷெட்டி, திஷா பதானி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரவீனா டாண்டன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2024 டிசம்பர் 20ம் தேதி அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இதன் அறிவிப்பு வீடியோ யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும், முதல் இரண்டு பாகங்களில் நடித்த அனில் கபூர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.