லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பாலிவுட்டில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷாரூக்கான். தற்போது அவர் நடித்து வெளிவந்த 'ஜவான்' படம் வெளியாகி உலகளவில் முதல் நாள் ரூ.129 கோடியை கடந்து வசூலித்தாக அறிவித்துள்ளனர். இரண்டு நாட்களில் 200 கோடியை கடந்துவிட்டதாக சொல்கிறார்கள். அடுத்து 3 இடியட்ஸ், சஞ்சு, பி.கே ஆகிய படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாரூக்கான் 'டன்கி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் டாப்ஸி கதாநாயகியாக நடிக்கிறார். ஷாரூக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் வருகின்ற டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்தனர். ஆனால், தற்போது ஒரு சில காரணங்களால் இந்த படத்தை 2024ல் அடுத்த வருடத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.