அறிமுக இயக்குனர் டைரக்சனில் மோகன்லால் நடிக்கும் படம் டிசம்பரில் துவக்கம் | ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் |

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். இவருக்கு ரங்கோலி என்கிற சகோதரியும் அக்ஷத் ரணவத் என்கிற சகோதரரும் இருக்கின்றனர். இதில் அக்ஷத்தின் மனைவி ரிது தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சியை விமரிசையாக கொண்டாடியுள்ளார் கங்கனா. மேலும் இந்த நிகழ்ச்சியின் போது அனைவரையும் வரவேற்று உற்சாகமாக்கிய கங்கனா சில நிமிடங்கள் நடனமும் ஆடி வருகை தந்த விருந்தினர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். .
மேலும் இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள கங்கனா, “நாங்கள் அனைவரும் இந்த குடும்பத்தின் புதிய வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் பேபி ரணாவத் வரப்போகிறார்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.