தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | போர்ஷே கார் உடன் ரேஸ் களத்தில் அஜித் : தமிழக அரசின் SDAT லோகோவும் அச்சிடல் | விவாகரத்து வழக்கு : ஜெயம் ரவி - ஆர்த்தி நேரில் ஆஜர் | தென்னிந்திய படங்களுக்கு வரவேற்பு ஏன் - தமன்னா பதில் | சந்தானம் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி | கனிமொழிக்கும் எனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு : சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினி | திருப்பதி கோவிலில் ஜோதிகா வழிபாடு | 15 ஆண்டு காதலை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் | மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | சிவகார்த்திகேயன் படம் : ஜெயம் ரவி போட்ட கண்டிஷன் |
பாலிவுட் தயாரிப்பாளரான சந்தீப் சிங் இந்த வருடம் மே மாதம் 'திப்பு' (ஹஸ்ரத் திப்பு சுல்தான்) என்ற படத்தைத் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார். திப்பு சுல்தான் பற்றிய உண்மை சம்பவங்களை படத்தில் சொல்லப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அவரது பட அறிவிப்புக்கு அப்போதிருந்தே எதிர்ப்புகள் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அப்படத் தயாரிப்பைக் கைவிடுவதாக சந்தீப் சிங் நேற்று அறிவித்துள்ளார்.
அது பற்றிய அறிக்கையில், “ஹஸ்ரத் திப்பு சுல்தான்' பற்றிய படம் உருவாக்கப்படாது. எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் என்னை அச்சுறுத்துவதையோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதையோ தவிர்க்குமாறு எனது சக சகோதர சகோதரிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நான் வேண்டுமென்றே யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எல்லா நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக நம்புவதால், அவ்வாறு செய்வது எனது நோக்கமாக இருந்ததில்லை.
இந்தியர்களாகிய நாம் என்றென்றும் ஒற்றுமையாக இருப்போம், எப்போதும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தியில் வெளியான “அலிகார், சர்ப்ஜித், பூமி, பிஎம் நரேந்திரமோடி, ஜுன்ட்” ஆகிய படங்களைத் தயாரித்தவர் சந்தீப் சிங்.