ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா |
பாலிவுட் நடிகர்கள் விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதை போல நடிகைகள் சொகுசு வீடுகளை வாங்குவதில் காட்டுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது தீபிகா படுகோனே இணைந்துள்ளார். மும்பை பாந்த்ரா கடற்கரைக்கு அருகில் உள்ள பிரமாண்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 16வது தளத்தில் உள்ள 4 வீடுகளையும் வாங்கி உள்ளார். இதன் மூலம் 16வது தளம் முழுக்கவே அவரது சொந்தமாகிறது. 4 வீடுகளும் தனித்தனியாக இருந்தாலும் தற்போது எல்லா வீடுகளையும் ஒரே வீடாக அவர் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடுகளின் மொத்த விலை ரூ.119 கோடி என்கிறார்கள்.
தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் தம்பதிகளுக்கு மகாராஷ்டிராவில் மாநிலம் அலிபாக் நகரில் அரண்மனை போன்ற பங்களாக உள்ளது. சினிமாவில் நடிக்க வசதியாக மும்பை பாந்தாரா பகுதியில் லீசுக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இப்போது அந்த பகுதியிலேயே சொந்த வீடு வாங்கி விட்டார். இதுதவிர பாலிவுட் படங்களில் நடித்து வரும் தீபிகாவிற்கு அமெரிக்காவிலும் சொந்த வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது. தீபிகா தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க 25 கோடி வரை சம்பளம் பெறுகிறார். 15 கோடி வாங்கி வந்த அவர் பதான் படத்திற்கு பிறகு 25 கோடியாக உயர்த்தி விட்டார் என்கிறார்கள்.