விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
தமிழ் இயக்குனர் அட்லி இயக்கி உள்ள முதல் பாலிவுட் படம் 'ஜவான்'. இந்த படத்தை ஷாருக்கான் தயாரித்து நடித்திருக்கிறார். அவருடன் தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய்சேதுபதி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் நிறைவடைந்தும் பல முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு கடைசியாக வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பலமுறை தள்ளி வைக்கப்பட்டதால் இந்த அறிவிப்பிலும் ரசிகர்கள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறர்கள்.
இந்த நிலையில் ஷாருக்கான் மாதம்தோறும் தனது ரசிகர்களுடன் 'ஆஸ்க் எஸ்ஆர்கே' என்ற நிகழ்ச்சி மூலம் சமூக வலைத்தளத்தின் தன் ரசிகர்களுடன் உரையாடுவார். அப்படி ஒரு உரையாடல் நேற்று நடந்தது. இதில் பெரும்பாலான ரசிகர்கள் ஜவான் ரிலீஸ் தேதி பற்றித்தான் கேட்டார்கள்.
அதற்கு பதிலளித்த ஷாருக்கான் “செப்டம்பர் 7ம் தேதி ஜவானை நீங்கள் கண்டிப்பாக சந்திக்கலாம். அட்லியுடன் கூலாக வருகிறார் ஜவான். இந்த படத்திற்காக நான் நிறைய உழைத்திருக்கிறேன். ஜவான் நிறைய சவால்கள் நிறைந்த படைப்பாக இருந்தது. விஜய்சேதுபதி எனக்கு பிடித்த நடிகர். அவர் கூலான மனிதர், ஆனால் படத்தில் வில்லன்” இவ்வாறு ஷாருக்கான் தனது பதிலில் கூறியிருக்கிறார்.