4 கோடி பார்வைகளை கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல்! | இயக்குனர் பீம்சிங்கின் 100வது பிறந்தநாள்: நடிகர் பிரபு நெகிழ்ச்சி | ஜனவரி மாதத்தில் வா வாத்தியார் படத்தை வெளியிட திட்டம் | 'சித்தார்த் 40' படத்தில் இசையமைப்பாளராக இணைந்த பாம்பே ஜெயஸ்ரீ மகன் | வீர தீர சூரன் படத்திலிருந்து வெளிவந்த துஷாரா விஜயன் பர்ஸ்ட் லுக் | பிரியங்கா சோப்ரா கதை : துஷாரா ஆசை | அதிக படங்கள் நடிக்காததற்கு உடல்நல குறைவு தான் காரணம் : துல்கர் சல்மான் | மகிழ்ச்சியை உணர வெளியில் இருந்து உதவியை எதிர்பார்க்காதீர்கள் : மஞ்சு வாரியர் | ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷினின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு | பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கிச்சா சுதீப் |
பாலிவுட்டில் தற்போதும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். 57 வயதான இவர் தற்போதும் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலராக திருமணம் பற்றிய எண்ணமே இல்லாமல் படங்களில் நடிப்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு நடித்து வருகிறார். இத்தனை வருடங்களில் பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டாலும் அவை எதுவுமே திருமணம் வரை நகரவில்லை.
இந்த நிலையில் தற்போது அபுதாபியில் நடைபெற்ற இபா (IIFA) திரைப்பட விழாவில் சல்மான்கான் கலந்து கொண்டார். அப்போது மீடியாக்களுடன் அவர் பேசும்போது ஒரு பெண்மணி குறுக்கிட்டு, தான் ஹாலிவுட்டை சேர்ந்தவர் என்று என்றும், சல்மான்கானை பார்த்ததுமே அவரை விரும்பத் தொடங்கி விட்டதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்றும் நேரடியாகவே கேள்வி எழுப்பினார்.
இதைக்கேட்ட சல்மான்கான் சற்றே நகைச்சுவையுடன் நீங்கள் நடிகர் ஷாருக்கானை தானே சொல்கிறீர்கள் என ரூட்டை மாற்றினார். ஆனாலும் அந்த பெண், இல்லை நான் விரும்புவது உங்களைத்தான் என்று கூறினார். அதற்கு பதிலளித்த சல்மான்கான், “நான் தற்போது திருமணம் செய்யும் வயதை தாண்டி விட்டேன். 20 வருடங்களுக்கு முன்பே உங்களை சந்தித்து இருந்தால் ஒருவேளை உங்கள் விருப்பம் நிறைவேறி இருக்கும்” என்று பதில் சொலி சமாளித்தார்.