பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | 'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' |
பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா. 'காமசூத்ரா' படத்தில் நடித்து புகழ்பெற்றவர். ரெட் ஸ்லஸ்திக், டைம் பாஸ், ரகூப் உள்பட ஏராளமான படங்களில் நடித்த்திருக்கிறார். தமிழில் 'யுனிவர்சிட்டி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தற்போது பட வாய்ப்புகள் இன்றி இருக்கும் ஷெர்லின் சோப்ரா தொழில் அதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், “என்னை மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் சுனில் லோதா ஒரு ஓட்டலில் என்னை சந்தித்து அவர் எடுக்கும் பாடல் ஆல்பத்தில் நடிக்க கேட்டார். நான் சம்மதித்தேன். எனது மேலாளரிடம் அட்வான்ஸ் தொகை கொடுத்தார்.
பின்னர் எனது வீட்டுக்கே வந்துவிட்டார். வீட்டில் சாப்பாடு வரவழைத்து சாப்பிட்டார். மது அருந்தினார். அதன்பிறகு என்னிடம் தவறாக நடக்க முயன்றார். நான் அதிர்ச்சியானேன். அவரை அன்று வலுகட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றினேன். தற்போது தொடர்ந்து பாலியல் மற்றும் கொலை மிரட்டல்கள் விடுத்து வருகிறார்” என்று கூறியுள்ளார். போலீசார் சுனில் லோதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.