ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
கடந்த, 1970 மற்றும் 80களில், தமிழ், தெலுங்கில், கனவுக் கன்னியாக கொடி கட்டிப் பறந்தவர், ஸ்ரீதேவி. இவருக்கு, பாலிவுட் சிவப்பு கம்பளம் விரித்ததால், அங்கும் சென்று, நடிப்பில் கலக்கினார். பல ஆண்டுகள், நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். திருமணம், குழந்தைகள் போன்ற காரணங்களுக்காக, சில ஆண்டுகள் நடிக்காமல், ஒதுங்கியிருந்த ஸ்ரீதேவி, சமீபத்தில், "இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம், தன் இரண்டாவது இன்னிங்சை அமர்க்களமாக துவங்கினார்.அவரது மூத்த மகள், ஜானவிக்கு தற்போது, 15 வயதாகிறது. மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் ஜானவி, மும்பையில் நடந்த, நட்சத்திர கிரிக்கெட் விழாவுக்கு சென்றிருந்தார். அங்கு அவரைப் பார்த்த, பல பாலிவுட் தயாரிப்பாளர்கள். அவரை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளனராம்.நட்சத்திர கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த பலரின் பார்வையும், ஜானவி மீதே பதிந்திருந்தது. ஆனால், ஜானவியோ, அதையெல்லாம், பொருட்படுத்தாமல், காதுகளில், "ஹெட்செட்டை மாட்டியபடி, பாடல்களை இனிமையாக ரசித்துக் கொண்டிருந்தார். ஜானவியை ஹீரோயினாக்கும் அதிர்ஷ்டம், யாருக்கு அடிக்கப் போகிறதோ?