பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
பாலிவுட் மாஜி ஹீரோ, அனில் கபூரின் மகள் சோனம் கபூர், ஆரம்பத்தில் நடித்த சில படங்கள், சரியாக போகவில்லை. இதனால், வருத்தத்தில் இருந்த அவர், தற்போது, தன் நடிப்புத் திறமைக்கு தீனி போடும் முக்கிய படங்களில் நடித்து வருவதால், அவரது முகத்தில், சந்தோஷக் களை, தாண்டவமாடுகிறது."கதையை சரியாக தேர்வு செய்யாமல், சில படங்களில் நடித்ததால், அந்த படங்கள் தோல்வியடைந்தன. இப்போது, சுதாரித்து விட்டேன். இயக்குனர்களிடம், கதையை முழுக்க கேட்டு, அதில் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே, நடிக்க ஒப்புக் கொள்கிறேன். தனுஷ் ஜோடியாக நடித்து வரும், "ராஜ்நீதி திரைப்படத்திலும், "பாக் மைக் பாக் என்ற படத்திலும், எனக்கு நல்ல கேரக்டர்கள் என்கிறார்.இதைத் தொடர்ந்து, யஷ்ராஜ் பிலிம்ஸ் தயரிக்கும் புதிய படத்திலும், சோனம் கபூர் நடிக்கிறார். இதில் இவருக்கு, வக்கீல் வேடமாம். இதனால், தனக்கு தெரிந்த, சில இளம் வக்கீல்களை சந்தித்து, அவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை, கேட்டு தெரிந்து கொள்கிறாராம்.