'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் இன்னும் பெரிய அளவில் வெற்றிகளைக் கொடுக்கவில்லை. இருந்தாலும் அவரை சோசியல் மீடியாவில் 21 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள். விதவிதமான ஆடைகளில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் ஜான்வி. அவற்றில் கிளாமரான புகைப்படங்கள் அதிகம் இடம் பெறும். கடந்த சில தினங்களாக தொடர்ந்து கிளாமரான புகைப்படங்கள், பிகினி புகைப்படங்களைப் பதிவிட்டு லைக்குகளைக் குவித்து வருகிறார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு பிகினி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டார். அவற்றிற்கு 16 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்தன. நேற்று அவர் பதிவிட்ட சில புகைப்படங்களுக்கு 10 லட்சம் லைக்குகள் கிடைத்தன. சற்று முன் மீண்டும் சில கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதற்கு பத்தே நிமிடத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. எந்த மாதிரியான புகைப்படங்களைப் பதிவிட்டால் அதிக லைக்குகள் கிடைக்கும் என்பதை ஜான்வி நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்.