பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம் 'பதான்'. 2023ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் கடந்த மாதம் ஷாரூக்கின் பிறந்த தினத்தன்று வெளியாகியது.
அடுத்து இப்படத்தின் முதல் சிங்கிளான 'பேஷராம் ரன்ங்' என்ற பாடலை டிசம்பர் 12ம் தேதியன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளனர். அதற்கான அறிவிப்புப் போஸ்டரில் தீபிகா படுகோனே நீச்சல் உடையில் இருக்கும் போஸ்டர்களைப் பகிர்ந்துதான் படக்குழு அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நேற்று ஒரு போஸ்டர், இன்று ஒரு போஸ்டர் என இரண்டிலுமே நீச்சல் உடையில்தான் இருக்கிறார் தீபிகா.
இன்றைய போஸ்டரைப் பகிர்ந்து ஷாருக்கான், “சுவற்றின் மீது கண்ணாடி, அவர்களில் மிக கிளாமராக இருப்பவர் அவர்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார். போஸ்டரில் சிறிதாக இடம் பெற்றிருந்த அந்த போட்டோவை, தனது இன்ஸ்டாகிராமில் பெரிதாகப் பதிவிட்டு அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தீபிகா. அடுத்தடுத்து தீபிகாவின் இரண்டு நீச்சல் உடை போஸ்டர்களுடன் வெளியாகியுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 12ம் தேதியன்று அந்தப் பாடல் வெளியானால் அது பரபரப்புடன், அதிக பார்வையையும் யு டியூபிலும், சமூக வலைத்தளங்களிலும் அள்ளும் என்பது உறுதி.