'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா |
மலையாள திரையுலகில் பிஸியான நடிகராக நடித்துவரும் பிரித்விராஜ், வெற்றிகரமான இயக்குனராகவும் வலம் வருகிறார். அதே சமயம் மலையாள திரையுலகோடு தனது எல்லையை சுருக்கி கொள்ளாமல் தென்னிந்திய மொழிகளிலும் அதைத் தாண்டி பாலிவுட்டிலும் நல்ல படங்கள் தேடி வரும்போது நடிக்கிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பிரித்விராஜ்..
இந்த நிலையில் ஏற்கனவே ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ் மீண்டும் தற்போது படே மியான் சோட்டா மியான் என்கிற படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அக்சய் குமார், டைகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். டைகர் ஜிந்தகி படத்தை இயக்கிய அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த கிரேஸி ஆக்சன் ரோலர்கோஸ்டர் (பிரித்விராஜ்) வரவால் இந்த படே மியான் குடும்பம் இன்னும் பெரிதாகி உள்ளது என அவரை வரவேற்றுள்ளார் நடிகர் அக்சய் குமார்.