டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகையாக இருக்கிறார். போனி கபூருக்கு சொகுசு பங்களா இருக்கிறது. ஸ்ரீதேவிக்கு சொந்தமான வீடு மும்பை மற்றும் சென்னையில் இருக்கிறது. என்றாலும் ஜான்வி கபூர் தனக்கென்று சொந்த வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். அதுவும் 65 கோடியில்.
மும்பை மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு சொகுசு அப்பார்ட்மெண்டில் அவர் வீடு வாங்கவில்லை, முதல் தளம், இரண்டாவது தளத்தை அப்படியே வாங்கி உள்ளார். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு செல்ல உள்ளுக்குள்ளேயே தனி படிக்கட்டு, லிப்ட் வசதி கொண்டது.
அதோடு நீச்சல் குளம், ஜிம், பார், மினி பார்க் உள்ளிட்ட வசதிகளை கொண்டது. மொத்தம் 6 ஆயிரத்து 421 சதுடி கொண்டது இந்த தளங்கள். இதன் பத்திர பதிவு சமீபத்தில் நடந்தது. அதற்கான முத்தரைதாள் மட்டும் 3 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார். தற்போது அந்தேரி பகுதியில் வசித்து வரும் ஜான்வியின் குடும்பம் விரைவில் இந்த வீட்டில் குடியேற இருக்கிறது.