ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
உத்திர பிரதேச மாநிலத்தில் போதை பொருள் தடுப்பு இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, பாலிவுட் நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர். அதேபோல் ஷாருக்கானின் மகன் கூட போதை பொருள் பயன்படுத்தி சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது போன்று பல நடிகர்கள் போதை பொருளை பயன்படுத்துகிறார்கள். மதுபானம் சினிமா, அரசியல் என அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவும் போதை பொருளுக்கு அடிமையாவதிலிருந்து விடுபட வேண்டும். இதற்கு இந்தியாவில் உள்ள அனைவரும் தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் போதைப்பொருள் பயன்படுத்தியவர் என்று அவர் வெளியிட்ட தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.